சாத்தான்குளம்: 5 காவலர்களும் சிபிஐ விசாரணைக்கு பிறகு இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 காவலர்களை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம்: 5 காவலர்களும் சிபிஐ விசாரணைக்கு பிறகு இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வளர் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 காவலர்களை சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் காவலர் முத்துராஜை சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மீதமுள்ள 4 காவலர்களிடமும் நேற்று காலை மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீதர், ரகு கணேஷ் உட்பட 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் சாத்தான்குளம் அழைத்து சென்றனர். கடந்த 19ஆம் தேதி ஜெயராஜை அவரது கடையில் இருந்து காவல்நிலையத்திற்கு எவ்வாறு அழைத்து சென்றனர் என்றும் எத்தனை மணிக்கு அழைத்துச் சென்றனர் என்றும் ஐந்து காவலர்களையும் நடித்துக் காட்டச் சொல்லி விசாரித்தனர்.


நள்ளிரவு ஒரு மணியளவில் விசாரணை முடிந்ததையடுத்து 5 பேரையும் மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோன்று சாத்தான்குளத்தில் தலைமை காவலர் ரேவதி, எழுத்தர் பியூலா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க...மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.முக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

இந்நிலையில், சிபிஐ காவல் முடிவதையொட்டி, ஐந்து காவலர்களும் இன்று மாலை மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading