சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : 2வது நாளாக இன்றும் தொடரவுள்ள சிபிஐ விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 5 காவலர்களை சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தவுள்ளனர். நேற்று, காவலர் முத்துராஜை சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

உயிரிழந்த தந்தை மகன்
- News18 Tamil
- Last Updated: July 15, 2020, 8:05 AM IST
சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
5 காவலர்களிடம் மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டனர். 5 காவலர்களுக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டதையடுத்து, ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காவலர் முத்துராஜை நேற்றிரவு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸை யார் யார் என்னென்ன சித்தரவதை செய்தார்கள் என்பதை நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. மேலும் படிக்க...
இரண்டு முகக் கவசங்கள்: கார் இருக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் கவர் - அமைச்சர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேலும், காமராஜர் சிலை அருகே உள்ள பென்னிக்ஸ் கடைக்கு முத்துராஜை அழைத்துச் சென்று ஜூன் 19ம் தேதி நடந்த சம்பவம் பற்றி நேரில் விசாரித்தனர். அதன்பின்னர் முத்துராஜை நள்ளிரவில் மதுரை அழைத்துச் சென்றனர். 5 காவலர்களிடம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை தொடர உள்ளது.
5 காவலர்களிடம் மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டனர். 5 காவலர்களுக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டதையடுத்து, ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காவலர் முத்துராஜை நேற்றிரவு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸை யார் யார் என்னென்ன சித்தரவதை செய்தார்கள் என்பதை நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது.