இரண்டாவது தாக்குதல்...? மருத்துவரின் ஆவணத்தில் முக்கிய தகவல்...! விசாரணையின் போக்கு மாறுமா..?

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் புதிய தகவல் அம்பலமாகியுள்ளது.

இரண்டாவது தாக்குதல்...? மருத்துவரின் ஆவணத்தில் முக்கிய தகவல்...! விசாரணையின் போக்கு மாறுமா..?
News 18
  • News18
  • Last Updated: July 3, 2020, 10:55 PM IST
  • Share this:
சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை வழக்கில் அவர்களை பரிசோதித்த பெண் மருத்துவரின் அறிக்கை நியூஸ்18 தமிழ்நாடு வசம் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கேள்வி எழுப்புகிறது மருத்துவரின் ஆவணம்..

கடந்த மாதம் 19-ம் தேதி இரவு 9 மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை மதிக்காமல், வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடை திறந்து வைத்திருந்ததாகவும், போராட்டம் நடத்தியதாகவும் போலீசார் ஜோடிக்கப்பட்ட வழக்குப் பதிவு செய்தனர்.

19-ம் தேதி இரவு 10 மணிக்கு இருவரும் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.


முதலில் ஜெயராஜையும், பின்னர் அங்கு வந்த பென்னிக்ஸையும் போலீசார் விடிய விடிய சித்திரவதை செய்ததாக விசாரணை நடுவர் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

20-ம் தேதி நடை முறையில் இதுவரை இல்லாத வகையில், கைதான இருவரையும் காலை 6 மணிக்கே மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துக் கொண்டு போலீசார் கிளம்பினர்.

காலை 8.30 மணிக்கு சாத்தன்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலா இருவரையும் பரிசோதனை செய்துள்ளார்.புட்டங்களில் இருவருக்கும் 2 செ.மீட்டரிலிருந்து 3 செ.மீட்டர் வரையில் காயங்கள் இருந்துள்ளதாகவும், ரத்தக்கசிவு இல்லை எனவும் மருத்துவர் தனது குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.

பென்னிக்சுக்கு மட்டும் இடது காலில், காலின் அடிப்பகுதியில் வீக்கம், வலது கை சுட்டு விரலில் வீக்கம், காயம் இருந்துள்ளதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். பென்னிக்ஸை போலீசார் துரத்தினர். தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டது என மருத்துவர் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஜெயராஜுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், அவருக்கு மாத்திரை கொடுத்து ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தார் மருத்துவர். ரத்த அழுத்தம் குறைந்த பின், இருவரையும் கிளாஸ் டூ பிரிவில், சிகிச்சை கொடுத்து சிறையில் அடைக்கலாம் என மருத்துவர் பரிந்துரைத்தார்.
படிக்க: சித்ரவதையை ஒப்புக்கொண்ட காவலர் - சிபிசிஐடி புது ப்ளான்


படிக்க: ஆகஸ்ட் 15 அறிமுகப்படுத்தப்பட இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து (COVAXIN) - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இவைதான்..
மருந்துகளை கொடுத்த மருத்துவர் வினிலா, இருவரையும் சிறையில் அடைக்கலாம் என உடல்தகுதிச் சான்று கொடுத்து அனுப்பியுள்ளார்.

மருத்துவமனைக்கு இருவரும் வந்தபோது அதிக ரத்தக்காயங்கள் இல்லை என்றும், நன்றாக நடந்து வந்துள்ள காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்றும் கூறுகிறது மருத்துவத் துறை.

20-ம் தேதி காலை 10.30 மணி இருவரையும் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணனிடம் போலீசார் அழைத்துச் சென்று நேர் நிறுத்தினர். மருத்துவ அறிக்கைகளை பார்த்தபின், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவரிடம் தகுதிச் சான்றிதழும், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும் உத்தரவும் வாங்கியவுடன், 20-ம் தேதி 11 மணி வாக்கில் இருவரையும் அழைத்துக் கொண்டு போலீசார் கோவில்பட்டி புறப்பட்டனர்.

110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரையும் அடைக்கும்போது, இருவரது புட்டங்களிலும் கடும் ரத்தக்கசிவு இருந்ததாக சிறை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மருத்துவர் அறிக்கையில் ரத்தக்கசிவு இல்லை என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், சிறைக்கு வருவதற்குள் கடும் ரத்தக்கசிவு ஏற்பட்டது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைப்பதற்கு முன்பு இருவரையும் வழியிலேயே போலீசார் மீண்டும் சித்திரவதை செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது

22 -ம் தேதி இரவு 9.45 மணிக்கு பென்னிக்ஸுக்கு கடுமையான ரத்தக்கசிவு, சீழ் கசிவு ஏற்பட்டதால், மருத்துவர் வெங்கடேசை சிறைத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து சிகிச்சை கொடுத்துள்ளனர்.

ஆய்வு செய்த மருத்துவர் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். புட்டத்தில் அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு அழைத்து வரவும் என குறிப்பு எழுதி வைத்து விட்டு கிளம்பியுள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 31 வயது பென்னிக்ஸ் இரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார்

இரவு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், தந்தை ஜெயராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ரத்தத்தின் சர்க்கரை அளவு உச்சகட்ட அளவான 437 தொட்டுள்ளது. ஜெயராஜுக்கு 23 -ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது; 5.40 மணிக்கு ஜெயராஜ் உயிரிழந்துள்ளார்

இருவரையும் சித்திரவதை செய்த போலீசாரை கைது செய்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள், இரண்டாவது தாக்குதல் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். விசாரணையின் போக்கு மாறுமா?
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading