Friends of Police-க்கு காவல்துறையின் எந்த அதிகாரமும் இல்லை - ஐ.ஜி முருகன்

Friends of Police அமைப்புக்கு காவல்துறை விசாரணையில் தலையிட உரிமை இல்லை என்று தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்

Friends of Police-க்கு காவல்துறையின் எந்த அதிகாரமும் இல்லை - ஐ.ஜி முருகன்
தென்மண்டல ஐஜி முருகன்
  • News18
  • Last Updated: July 2, 2020, 2:51 PM IST
  • Share this:
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் போலீசாரின் சித்ரவதையால் உயிரிழந்ததை அடுத்து, தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார்.

இன்று பொறுப்பேற்றுகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென் மண்டல காவல் துறை தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளேன்.சிபிசிஐடி போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

லாக்அப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்களை காவல்துறை ஆதரிக்கவில்லை. விசாரணை முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. நீதிமன்ற கட்டளைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதில் உண்மையல்ல.


சாட்சியாக மாறிய காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத விடுப்பு ஊதியத்துடன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.




படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?

படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை








புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்பது ஒரளவு உண்மை. தொடர் பயிற்சியில் மாற்றம் ஏற்படும்.

Friends of police ற்கு காவல்துறைக்கான உரிமை இல்லை. காவல்துறை விசாரணையில் அவர்கள் தலையிட முடியாது. தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் தடுக்க போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடந்தது.

இதில், தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு, மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

லாக்கப் மரணங்களை தடுப்பது, சட்டம் ஒழுங்கை காப்பது, முதலமைச்சரின் சாத்தான்குளம் வருகை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading