சித்ரவதையை ஒப்புக்கொண்ட காவலர் - சிபிசிஐடி புது ப்ளான்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை செய்யப்பட்டது குறித்து 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சித்ரவதையை ஒப்புக்கொண்ட காவலர் - சிபிசிஐடி புது ப்ளான்
கைதான காவல்துறையினர்
  • News18
  • Last Updated: July 3, 2020, 6:14 PM IST
  • Share this:
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 காவலர்கள் மீதும் கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், கொலை மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெயராஜும், பென்னிக்ஸும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்ததால், தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தந்தை மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து காவலர் ரேவதி சாட்சியம் அளித்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை என்பவர் அப்ரூவராக மாறியுள்ளார்.

இதேபோல், தந்தை மகனை சித்ரவதை செய்ததை, காவலர் முத்துராஜும் சிபிசிஐடி போலிசிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அவரையும் அப்ரூவராக மாற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.


ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்


தந்தை - மகன் கொலை குறித்து சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி வீட்டுக்கு, 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை உயரதிகாரிகளால் தன் மனைவிக்கு எந்த தொந்தரவும் வரக் கூடாது என ரேவதியின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தங்கள் குடும்பத்திற்கு நடந்தது போல் இனி வேறு எங்கும் நிகழாதவாறு தமிழக அரசும் நீதிமன்றமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்ஸி கோரிக்கை விடுத்துள்ளார்.


படிக்க: துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா - இன்று மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி

படிக்க: டிக்-டாக் செயலி தடையால் ₹45,000 கோடி இழப்பு... சீன அரசு ஊடகம் தகவல்

இந்நிலையில், லாக்கப் மரணங்கள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ள தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன், சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதனிடையே, சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பராமரிப்பாளர் தாமஸ் பிரான்சிடம், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். தந்தை-மகன் தாக்கப்பட்டபோது காட்சிகள் பதிவாகவில்லை எனவும், பதிவாகும் சிசிடிவி காட்சிகள் அன்றைய தினமே அழிந்துவிடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலைய ஓட்டுநர் ஜெயசேகரனிடம் திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரணை நடத்தினார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading