7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ராஜா 15 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின் கைது.. நடந்தது என்ன?

கோப்புப் படம்

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய நபர் 15 மணி நேரத்திற்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

 • Share this:
  அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் சிறுமி கொல்லப்பட்டது தொடர்பாக வீட்டருகே வசிக்கும் சாமிவேல் என்ற ராஜாவை போலீசார் கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் ராஜா மீது போக்சோ சட்டம் பதியப்பட்டதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்தபின்பு பரிசோதனை முடிவுகளை பெற்று கொள்ளச் சென்றபோது, நேற்று ராஜா தப்பியோடிவிட்டார்.

  இதையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், முள்ளூர் விளக்கு பிரிவு சாலையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் பதுங்கி இருந்த ராஜாவை போலீசார் பிடித்தனர்.

  மேலும் படிக்க...

  இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவிற்கு விமான சேவை

  இதனிடையே ராஜா தப்பியோடியது தொடர்பாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: