சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஏற்கெனவே சிபிஐ விசாரிக்கும் வழக்குகளின் நிலை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்ரீராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் நிலையில் அதனுடைய நிலை என்ன என்று பார்க்கலாம்.

சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஏற்கெனவே சிபிஐ விசாரிக்கும் வழக்குகளின் நிலை என்ன?
சிபிஐ
  • Share this:
சாத்தான்குளம் சித்திரவதை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், உள்ளூர் போலீசார் விசாரணைக்கும் சிபிஐ விசாரணைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, இதற்கு முன்பு தமிழகம் தொடர்புள்ள எத்தனை வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது என்பன குறித்து அறிய வேண்டியிருக்கிறது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழ்ந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது முதல் வழக்கல்ல; தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய பல வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.


ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியில் வீட்டிலிருந்து பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது, கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் உரிய ஆதாரம் இல்லை என சிபிஐ அவர் மீதான வழக்கை முடித்துக்கொண்டது.

அமைச்சர், மூத்த அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக அதிரவைத்த இந்த வழக்கில், சிபிஐ முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கியமானவர்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை. ஆனால், தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Also see:ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், 13 பேர் கொல்லப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு விசாரணை சிபிஐ கையில் எடுத்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், விசாரணையில் சொல்லும்படியான முன்னேற்றம் இல்லை.

திமுக முதன்மைச் செயலாளர் திருச்சி கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் 8 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு ஒரு ஆண்டு ஆனபோதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

சிபிஐ விசாரித்தபோதும், இந்த வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாதது ஏன் எனும் கேள்வி அழுத்தமாக இங்கு எழுகிறது.

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிப்பதே இந்த வழக்கிற்கு ஏற்றது என்ற கருத்து நிலவி வருகிறது. எந்த அமைப்பு விசாரணை நடத்தினாலும், பாதிக்கப்பட்டுவர்களுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading