மாஜிஸ்திரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட் - ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி. இடமாற்றம்

சாத்தான் குளம் வழக்கில் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா என மாஜிஸ்ரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட் - ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி. இடமாற்றம்
காவலர் மகாராஜன்
  • News18
  • Last Updated: June 30, 2020, 7:23 AM IST
  • Share this:
சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை திங்கள்கிழமை நடந்து முடிந்த நிலையில், நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் புகார் வந்ததாகக் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்ததுறை நடுவர் விசாரணை நடத்தியபோது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும், தேவையான ஆவணங்களை தராமல் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினர்.

மேலும், மகாராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில் நீதித்துறை நடுவரை திட்டியதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.





படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?



மேலும், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், காவலர் மகாராஜனை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading