சாத்தான் குளம் வழக்கு - மேலும் 5 காவல் துறையினரை கைது செய்த சிபிசிஐடி

சாத்தான்குளம் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேருடன் தற்போது வரை 10 காவலர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான் குளம் வழக்கு - மேலும் 5 காவல் துறையினரை கைது செய்த சிபிசிஐடி
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
  • News18
  • Last Updated: July 8, 2020, 9:47 AM IST
  • Share this:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை , காவலர்கள் வேல்துரை, தாமஸ், சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர், சிபிசிஐடி போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேருடன் தற்போது வரை 10 காவலர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading