தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
நீதிமன்ற உத்தரவின்படி கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1. நீதிபதி பாரதிதாசன் திடீரென இன்று விசாரணை மேற்கொண்டார்.
சுமார் 10 நிமிடம் நடைபெற்ற இந்த விசாரணை ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்கு கொண்டு வந்தபோது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், சிறையில் அளிக்கப்பட்ட மருத்துவ சான்று ஆவணங்களை நீதிபதி பார்வை விட்டதாக கூறப்படுகிறது.
சில விசாரணைக் கைதிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. வழக்கு சிபிஐக்கு சென்ற நிலையில் திடீரென நீதிபதி விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.