மன அழுத்தத்தால் காவலர்கள் அப்படி பேசிவிட்டனர் - அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் காவலர் ஆஜராகியுள்ளனர்

மன அழுத்தத்தால் காவலர்கள் அப்படி பேசிவிட்டனர் - அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 30, 2020, 11:14 AM IST
  • Share this:
தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக காவலர் மகாராஜன், ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி, மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.

வழக்கு விசாரணையில், நீதிபதிகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி கூறியதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

3 பேருக்கும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading