சாத்தான்குளம் கொலை வழக்கு - 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

நாளை காலை 11 மணிக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் கொலை வழக்கு - 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
கைதான காவல்துறையினர்
  • Share this:
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரை நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


Also read... 'காதுல, கழுத்துல இருக்கறத வித்து கஞ்சி குடிக்கிறோம்...' கடற்கரை வியாபாரிகளின் கண்ணீர் கதைகள்

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹேமா நந்தகுமார் நாளை காலை 11 மணிக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading