மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பெர்னார்ட் சேவியர் மரக் கிளைகளை அகற்றி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்
வெட்டப்பட்ட மரம் | ஆய்வாளர்
  • News18
  • Last Updated: July 21, 2020, 8:36 PM IST
  • Share this:
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை - மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த மாதம் 19-ம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இதனையடுத்து காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ சாத்தாங்குளம் பகுதிக்கு அழைத்து வந்து காவல் நிலையம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவலர்கள் செல்லத்துரை, சாமத்துனர,  வெயிலு முத்து ஆகிய மூன்று பேரையும் விசாரணைக்கு எடுத்துள்ள சிபிஐ போலீசார் சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்து வந்து நான்கரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.


எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடைபெற்றது. இதனிடையே காவல் நிலையம் முன்பு இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றப்பட்டுள்ளதை கண்ட விசாரணை அதிகாரி வி.கே சுக்லா காவல் நிலைய ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பெர்னாட்ஸ் சேவியர் அழைத்து விசாரணை நடத்தினார்.

காவல் நிலையத்தில் வேப்ப மரத்தின் கிளைகள் வெட்டப்படுவதற்கு முன்பு வெளியிலிருந்து பார்த்தால் காவல்நிலையத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் எதுவும் தெரியாது. தற்போது 100 அடி தூரத்தில் இருந்து பார்த்தாலும் காவல்நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகள் தெரியும் அளவில் உள்ளது. இதனால் ஆய்வாளரை கடிந்து கொண்ட சிபிஐ அதிகாரி, சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.


படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
சம்பவம் நடைபெற்றபோது காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஜெயராஜ் உறவினர்கள் தந்தை மகன் இருவரும் காவல்துறையால் தாக்கப்படும் சத்தத்தை கேட்டுள்ளனர். ஆனால் யாரும் நேரில் பார்க்கவில்லை. தற்போது மரக்கிளை வெட்டப்பட்டுள்ளன மூலம் விசாரணையில் தொய்வு ஏற்படும் என நினைத்த விசாரணை அதிகாரி மரக்கிளைகள் வெட்டப்பட்டதற்கு உரிய காரணத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மரம், செடி, கொடிகள் அதிகமாக இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அதிகம் தென்படுவதால் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது. செடி கொடிகள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். எனினும் சிபிஐ விசாரணை முடியும் வரை காவல்நிலையத்தில் எந்த விதமான மாறுதல்களும் செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறியதாகவும் ஆய்வாளரின் விளக்கத்தை எழுத்துபூர்வமாக பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading