சாத்தான்குளம் காவல் நிலையத்திலேயே தாக்குதல் நடந்துள்ளது - சிபிஐ விசாரணையில் அம்பலம்

Youtube Video

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ், பெனிக்சை போலீசார் கடுமையாக தாக்கியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 • Share this:
  சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் தாமஸ் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேருடன் வந்து, தந்தை, மகன் இருவரையும் ரகுகணேஷ் தாக்கியதாக குறிப்பிட்டார். ஆய்வாளர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் தாக்கியதாகவும், என்ன காரணத்திற்காக ஆய்வாளர் ஸ்ரீதர், தந்தை, மகனை தாக்க கூறினார் என்பது விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

  இதனை தொடர்ந்து ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், ஜெயராஜின் கைகளை காவலர் தாமஸ் பிடித்துக் கொண்ட போது, பாலகிருஷ்ணன் அவரை தாக்கியதாக குறிப்பிட்டார் நள்ளிரவு மூன்று மணிக்கு கூட இருவரும் பல கட்டங்களாக தாக்கப்பட்டதாகவும், எனவே ஜாமின் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இருவரும் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு, நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருப்பதாக சாட்சிகள் தெளிவாக கூறியுள்ளதாகவும், இதுபோன்ற கடுமையான வழக்குகளில் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தது.

  மேலும் படிக்க...அடிப்படைவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு  இதனை தொடர்ந்து சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
  Published by:Vaijayanthi S
  First published: