சாத்தான்குளத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் திட்டத்தை மாற்றிய சிபிஐ

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.

சாத்தான்குளத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் திட்டத்தை மாற்றிய சிபிஐ
கைதான காவல்துறையினர்
  • News18
  • Last Updated: July 14, 2020, 8:00 PM IST
  • Share this:
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஜெயராஜ்,பென்னிக்ஸ் வீடுகளிலும், சாத்தான்குளம் காவல்நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தியது.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஹமந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதுரை மத்திய சிறையில் இருந்து காவலர்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, வழக்கின் முக்கியத்துவம் கருதி காவலர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, 5 காவர்களிடமும் நீதிபதி தனித்தனியே விருப்பத்தை கேட்டபோது, தங்கள் தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கண்ணியமான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


அதன்படி, தினமும் ஒரு மணி நேரம் அவர்கள் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும், உரிய நேரத்தில் உணவு, தேவையான ஆடைகள் வழங்க வேண்டும், மன அழுத்தம் ஏற்படும் வகையில் விசாரிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளோடு, 5 காவலர்களையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதோடு, எந்தவித துன்புறுத்தலும் இல்லாமல் 5 பேரையும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 காவலர்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 5 காவலர்களுக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கமான சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உப்புச்சத்து உள்ளிட்டவை குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதோடு, அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் காவலர்கள் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.


படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்








இதையடுத்து, மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதலில் சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்கு காவலர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மதுரை சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அடுத்த 2 நாட்களும் மதுரையில் வைத்தே 5 காவலர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது

 
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading