சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், காவல்நிலையத்தில் பணியாற்றிய 9 காவலர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..
உயிரிழந்த தந்தை மகன்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 7:34 AM IST
  • Share this:
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கொலை தொடர்பாக கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார். இதனால், மற்ற 9 பேர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்ஸிஸ், வேலுமுத்து ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க.. தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த அரசு பேருந்து நடத்துநர் கைது


ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குள் சட்டவிரோதமாக வைத்து துன்புறுத்தப்பட்டதாகவும், தந்தையும், மகனும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தந்தை, மகன் கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading