• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி - ஜெயக்குமார்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி - ஜெயக்குமார்

 ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி - ஜெயக்குமார்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி - ஜெயக்குமார்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி என முன்னாள் அமைச்சரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுகவின் பொன்விழாவையொட்டி வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்விழா கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடலில் எல்லை என்பதே கிடையாது காற்றின் வேகத்தில் தான் செல்வார்கள். இதுபோன்ற கைது நடவடிக்கைகளையும், சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். இது தொடர்கதையாக உள்ளது, எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் செல்வது வீண் முயற்சி எனவும் அதனால் கட்சியில் எவ்வித பிளவையும் அவரால் ஏற்படுத்த முடியாது என கூறினார்.

    பின்னர் சசிகலவை குறிப்பிட்டு பேசிய ஜெயகுமார், ஜெயலலிதா மட்டுமே அம்மா மற்றவரெல்லாம் சும்மா என கூறினார். அம்மா என்ற வார்த்தையை சசிகலா பயன்படுத்த கூடாது என விமர்சித்தார். தமிழகத்தில் இரண்டு தீய சக்திகள் உள்ளது ஒன்று திமுக மற்றொன்று சசிகலா என கூறிய அவர், அதிமுகவில் தொண்டர்கள் ஒன்றாக உள்ளனர், எந்த தீய சக்தியாலும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது என கூறினார்.

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுகாவிற்கு பின்னடைவு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறையில் நடைபெற்று இருந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருந்திருக்கும் என்ற அவர் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக கட்சித் தொண்டர்களை வைத்து, திமுக தேர்தல் நடத்தி இருக்கலாம் என விமர்சித்தார்.

    உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த வெற்றி அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறினார்.

    எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல் அதிமுக கொடியையும் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் சசிகலா பயன்படுத்தி வருகிறார் என கூறிய அவரிடம் நாளை ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்லும் போது அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு, சசிகலாவை எதிர்த்து போராட்டம் செய்து அவரை பெரிய ஆளாக ஆக்க விரும்பவில்லை என ஜெயக்குமார் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: