ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் குற்றச்சாட்டு! ஓ.பன்னீர்செல்வம் மீது சந்தேகம் எழுப்பும் சசிகலா வழக்கறிஞர்

அமைச்சர் குற்றச்சாட்டு! ஓ.பன்னீர்செல்வம் மீது சந்தேகம் எழுப்பும் சசிகலா வழக்கறிஞர்

அமைச்சர் சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம்

140 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்துள்ளேன். அந்த அடிப்படையில் கூறுகிறேன், சாட்சிகளின் பதிலில் எந்தக் குளறுபடியும் இல்லை.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்காகக்தான் ராதாகிருஷ்ணன் மீது இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது என்ற சந்தேகம் உள்ளது என்று சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மேல்சிகிச்சைக்காக, அவரை வெளிநாடு செல்லவிடாமல் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்தான் தடுத்தார். அவருடைய பின்னணி குறித்து விசாரணை செய்யவேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘தமிழக அரசுதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அமைத்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று பலமுறை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை என்று தற்போதுள்ள தமிழக அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

விசாரணை ஆணையம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 8-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ள நிலையில், சுகாதாரத்துறைச் செயலாளருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. நீதிமன்றத்தின் முன் மனு இருக்கிறது. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், ஆணையத்தின் விசாரணைக்கு வந்து 25 நாள்களே ஆனநிலையில் வழக்கறிஞர் கான் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். 140 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்துள்ளேன். அந்த அடிப்படையில் கூறுகிறேன், சாட்சிகளின் பதிலில் எந்தக் குளறுபடியும் இல்லை. சி.வி.சண்முகம் அ.தி.மு.க பிரமுகராக பேசினாரா, அல்லது அமைச்சராக பேசினாரா என்று தெரியவில்லை.

ஆனால், அவர், விசாரணை ஆணையத்தை நிர்பந்திக்கும் வகையில் பேசியுள்ளார். எங்களுடைய இலக்கு, ஓ.பன்னீர்செல்வம் 8-ம் தேதி விசாரணைக்கு வரவேண்டும். அப்போதுதான் அவர், தொடர்பான விஷயங்கள் வெளிவரும். ராதாகிருஷ்ணன் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே ஜெயலலிதா சிகிச்சையில் என்ன செய்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை விவரம் குறித்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வாங்கிக் கொடுத்தார். அந்த அறிக்கை இந்த அமைச்சரவையின் ஒப்புதலுடன்தான் வெளியிட்டப்பட்டது. ஒருவேளை இவர்கள் குற்றம் சொல்லவேண்டுமென்றால், 3-12-2016-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்த எயம்ஸ் மருத்துவர்களைத் தான் குற்றம் சொல்லவேண்டும்.

அவர்கள், ஜெயலலிதாவைப் பார்த்தோம். அவர் சாய்ந்த நிலையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவருக்கு அதிதீவிர இதயச் சிகிச்சை தேவையில்லை என்று கூறினர். அதேவிவரத்தை விசாரணை ஆணையத்திலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நால்வர் தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் புகார் எழுப்பப்படுகிறது. நாங்கள், உரிய ஆவணத்துடன் ஆணையத்தில் விளக்கம் அளிப்போம். தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் விசாரணைக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு இந்தக் குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: CV Shanmugam, Jayalalithaa