Home /News /tamil-nadu /

'அன்பும், நட்பும் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும்' : நடிகர் ரஜினிகாந்துக்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்து

'அன்பும், நட்பும் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும்' : நடிகர் ரஜினிகாந்துக்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்து

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும் ரஜினிகாந்த் வாழ வேண்டும் என்று சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தனது, 72வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     

    Also Read : நரிக்குறவ தம்பதிக்கு பாத பூஜை செய்த போக்குவரத்து ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ

    பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது தலைசிறந்த மற்றும் புதுமையான நடிப்பால் இன்னும் ஏராளமான மக்களை ரஜினிகாந்த் ஈர்க்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் ரஜினிகாந்துக்கு ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை வழங்க பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
    72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கும்; நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : கருத்துரிமை பறிப்பு: திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டம்!

    இந்நிலையில் சசிகலாவும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னை, அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது அன்பும், நட்பும், சகோதர பாசமும், என்னென்றும் நிலைத்திருக்க எந்ளும் இறைவனின் அருள் கிடைக்கப் பெற வேண்டும். நீண்ட ஆயுளோடு நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறப்பவரம், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷன், தாதா சாகெப் பால்கே விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவரும், சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறையருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்த்து உயர்த்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்' என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth, Sasikala

    அடுத்த செய்தி