பிப்ரவரி 17-ம் தேதி தஞ்சாவூர் செல்கிறார் சசிகலா - பயணத்தின் நோக்கம் என்ன?

பிப்ரவரி 17-ம் தேதி தஞ்சாவூர் செல்கிறார் சசிகலா - பயணத்தின் நோக்கம் என்ன?

சசிகலா

சசிகலா, வரும் 17-ம் தேதி தஞ்சாவூருக்கு செல்கிறார்.

 • Share this:
  சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையிலிருந்து சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனை சிகிச்சையிலும் பெங்களூரு சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தார் சசிகலா. இந்தநிலையில், பிப்ரவரி 8-ம் தேதி காலை 7.45 மணிக்கு பெங்களூரு சொகுசு விடுதியிலிருந்து சசிகலா தமிழகம் புறப்பட்டார். அ.தி.மு.கவின் கொடியைக் கட்டிக்கொண்டு சாலை வழியாக காரில் வந்த சசிகலாவுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  மறுநாள் காலையில் சென்னை வந்தடைந்த சசிகலா மிகச்சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. 9-ம் தேதி சென்னை வந்தடைந்தஅவர், சென்னை தியாகராய நகரிலுள்ள இளவரசியின்வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில், அவர் 17-ம் தேதி தஞ்சாவூருக்கு செல்கிறார்.

  தஞ்சையில் முக்கிய உறவினர்களை சந்திக்கவும், ஓய்வெடுக்கவும் அவர் தஞ்சை செல்வதாக கூறப்பட்டாலும், நிர்வாகிகள் சிலரை சந்திக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, வரும் 25ம் தேதி அமமுகவைச் சேர்ந்த 5 நிர்வாகிகள், டெல்லி செல்கின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: