Sasikala | ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டிற்குச் சென்ற சசிகலா..!

சசிகலா

சுமார் 2 டன் பூக்களை சசிகலா காரின் மீது தூவி பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் வாணவேடிக்கையுடன் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, இன்று அதிகாலை, ராமாபுரம் வந்தார். அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்ற அவர், அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பெங்களூருவில் இருந்து நேற்று புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு வந்தடைந்தார் சசிகலா.

    அவருக்கு திருவள்ளூர் கிழக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, பூவிருந்தவல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் கட்சியினருடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது, சுமார் 2 டன் பூக்களை சசிகலா காரின் மீது தூவி பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் வாணவேடிக்கையுடன் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். சசிகலாவிற்கு வெள்ளியால் ஆன விநாயகர் சிலை, ரூபாய் நோட்டு மாலை என வழங்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, ராமாபுரம் வந்தடைந்தார் சசிகலா. அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் படிக்க... அடக்குமுறைக்கு என்றும் அடிபணியமாட்டேன் - சசிகலா சூளுரை

    இந்நிலையில், சசிகலா மீஞ்சூர் -வண்டலூர் புறவழி வெளிவட்ட சாலை வந்தபோது வரவேற்பு நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெண் தொண்டரிடம் தங்கச்சங்கிலி மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. அதேபோன்று தொண்டர் ஒருவரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் மற்றும் ஒரு நபரிடம் 3000 ரூபாய் பணமும் மர்மநபர்கள் கைவரிசை காட்டி திருடிச் சென்றனர்.
    Published by:Suresh V
    First published: