போயஸ் கார்டனுக்கு சசிகலா திடீர் விசிட்

போயஸ் கார்டனுக்கு சசிகலா திடீர் விசிட்

சசிகலா

போயஸ் கார்டனுக்கு சென்ற சசிகலா, ஜெயலலிதா வீட்டிற்கு வெளியே இருக்கும் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், வீட்டுக்கு எதிரே கட்டப்பட்டு வரும் புது பங்களாவின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

  • Share this:
போயஸ் கார்டனுக்கு சென்ற சசிகலா, ஜெயலலிதா வீட்டிற்கு வெளியே இருக்கும் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், வீட்டுக்கு எதிரே கட்டப்பட்டு வரும் புது பங்களாவின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சென்னை தி.நகரில் தங்கி இருக்கும் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாக அறிவித்தார். இந்நிலையில், சமீபத்தில் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் யாகம் செய்தும் வழிபட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி சென்னை திரும்பினார் சசிகலா. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனுக்கு சென்றார். அங்கே ஜெயலலிதா வீட்டு வாசல் அருகே உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஜெயலலிதா எப்போது வெளியே சென்று திரும்பினாலும் இந்த விநாயகரை வழிபட்டு பின்னர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே, புது பங்களா சசிகலாவுக்காக கட்டப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகளை வெளியில் இருந்தபடி பார்வையிட்டார் சசிகலா. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கியிருந்தார். இனி, அந்த வீட்டிற்கு எதிரே வசிக்க திட்டமிடுட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதற்காக கட்டப்பட்டு வரும் பங்களா இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் என்றும், அங்கு சசிகலா குடியேறுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Must Read : சசிகலா மீது நன்மதிப்பு உள்ளது... அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் : ஓபிஎஸ் கருத்து

 

ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசு உடமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. எனினும் இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட வில்லை என்பதால் சசிகலா வீட்டிற்கு உள்ள செல்லவில்லை. அந்த வீட்டை பார்த்தபடியே சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: