Sasikala | தி.மு.க.வின் பி டீம் தான் தினகரனும், சசிகலாவும் - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்ட விரோதமானது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அவர் மீது அ.தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. அவரும் அவரை சார்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடாது. இது சட்ட விரோதமனது என கூறிய அவர், இது தொடர்பாக காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்றமே இவர்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி விட்டது. இவர்கள் வழக்கு போட்ட காரணத்தால் உரிமை கொண்டாட முடியாது. கட்சியும் சரி கொடியும் சரி எந்த விதத்திலும் அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    4 அமைச்சர்கள் மட்டுமே சசிக்கலாவை எதிர்க்கிறார்கள் என டி.டி.வி.தினகரன் கூறியதற்கு? காதுக்கு பூ சுத்தும் வேலையை டி.டி.வி.தினகரன் செய்வார்.

    தலைமை முதல் அடி மட்டம் வரை அனைவரும் ஒத்த கருத்தில் தான் உள்ளனர். யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை சீரழிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் தி.மு.கவின் பி டீம் தான் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா என அவர் கூறினார்.

    அ.தி.மு.கவில் ஸ்லீப்பர் செல் கிடையாது. ஆனால், அ.தி.மு.கவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தினகரனும் சசிகலாவும் அ.தி.மு.கவிற்கு விசுவாசமாக இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் போட்டியிட்டார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: