சசிகலாவுக்கு நுரையீரலில் தீவிரத் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர் சிசிச்சை
சசிகலாவுக்கு நுரையீரலில் தீவிரத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா
- News18 Tamil
- Last Updated: January 22, 2021, 8:10 AM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து இம்மாதம் 27-ம் தேதி விடுதலையாக உள்ளார். கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில் அவருக்கு புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஏற்கனவே சர்க்கரை, தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்ட சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு இயல்பைவிட குறைவானதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இரவு 7 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக ஆன்டிஜென் எனப்படும் விரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சசிகலாவுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. அதன்பிறகு ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சசிகலாவுக்கு சுவாச கருவி பொறுத்தி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மருத்துவர்கள் சசிகலாவை இரவு ஒரு மணியளவில் ஸ்ட்ரெட்சர் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றி கண்காணித்தனர்.
சசிகலாவின் உடல்நிலை குறித்து அறிந்த அவரது உறவினர்களான அமமுக பொதுசெயலாளர் டிடிவி, விவேக், ஜெய் ஆனந்த், குடும்ப மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பெங்களூரு விரைந்தனர்.சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னர் சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று இல்லை என உறுதி ஆகியுள்ளதாக தெரிவித்தார். சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் கூறினார். சசிகலாவை சந்திக்க சிறைத்துறை அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். சசிகலாவுக்கு தீவிர சுவாச பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சையளித்து வருவதாகவும், அவரை மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிக்க உள்ளதாகவும் பவுரிங் அரசு மருத்துவமனை இயக்குனர் மனோஜ் குமார் தெரிவித்தார்.
மதியம் ஒன்றரை மணியளவில் சசிகலா சக்கர நாற்காலி மூலம் ஆம்புலன்ஸுல் ஏற்றப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது, சிடி ஸ்கேன் முடிவின் அடிப்படையில் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
ஏற்கனவே சர்க்கரை, தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்ட சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு இயல்பைவிட குறைவானதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இரவு 7 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.