ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

23 மணி நேர பயணம்... அதிகாலையில் வீடு சேர்ந்த சசிகலா.. அடுத்த திட்டம் என்ன?

23 மணி நேர பயணம்... அதிகாலையில் வீடு சேர்ந்த சசிகலா.. அடுத்த திட்டம் என்ன?

சசிகலா

சசிகலா

சுமார் 23 மணிநேரம் பயணம் செய்த சசிகலாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பசுமாட்டிற்கு, கோமாதா பூஜை செய்து வழிபட்டார் சசிகலா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி கொரோனா சிகிச்சை முடித்து,  நேற்று காலை 7.55 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து தொடர்ந்து காரில் பயணித்து வந்த சசிகலா இரவு நள்ளிரவு 3 மணி அளவில் சென்னை பூந்தமல்லி வந்து சேர்ந்தார். அங்கு திரண்டு நின்ற ஏராளமான தொண்டர்கள் ஆதரவாளர்கள் அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து போரூர் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு காலை நான்கு முப்பது மணிக்கு எம்ஜிஆர் வாழ்ந்த இல்லமான ராமாபுரம் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார்.

சசிகலா

அங்கு நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சிலையானது நான்காண்டுகளுக்கு முன்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது நிறுவப்பட்டதாகும். இதையடுத்து அதே வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அங்கிருந்து காலை 4.50 மணிக்கு புறப்பட்ட  சசிகலாவுக்கு கிண்டி கத்திபாரா,  சின்னமலை, சைதாப்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து 6.25 மணிக்கு அவர் தியாகராய நகரில் உள்ள இளவரசியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

சசிகலா

சுமார் 23 மணிநேரம் பயணம் செய்த அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பசுமாட்டிற்கு, கோமாதா பூஜை செய்து வழிபட்டார் சசிகலா. இந்நிலையில், இன்றும் நாளையும் அவர் எங்கேயும் வெளியில் செல்லாமல் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க.... அடக்குமுறைக்கு என்றும் அடிபணியமாட்டேன் - சசிகலா சூளுரை

போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சமையல் செய்த ராஜம் என்ற பெண்மணி தனது குழுவினருடன் தற்போது இளவரசி வீட்டுக்கு வந்துள்ளார். இவர்தான் சசிகலாவுக்கு சமையல் செய்து கொடுக்க இருப்பதாகவும் தெரியவருகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Chennai, Sasikala