• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Sasikala: மீண்டும் சசிகலா ! ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருகை... ஆட்களை திரட்டும் ஆதரவாளர்கள்.. அதிமுக அதிருப்தியாளர்ளும் பங்கேற்பு!

Sasikala: மீண்டும் சசிகலா ! ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருகை... ஆட்களை திரட்டும் ஆதரவாளர்கள்.. அதிமுக அதிருப்தியாளர்ளும் பங்கேற்பு!

சசிகலா

சசிகலா

ராமாபுரத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு சென்று அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கிறார். அங்கு அதிமுக கொடியை ஏற்றுகிறார். அதிமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு நாளை மறுதினம் சென்று சசிகலா நடராஜன்  அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக ஆட்களை திரட்டும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின் கடந்த ஜனவரி மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். இதையடுத்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே அதிமுக நிர்வாகிகளை செல்போனில்தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

    தொண்டர்களின் விருப்பப்படி மீண்டும் அதிமுக தலைமை ஏற்பேன்.. அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஆடியோக்கள் வெளியிட்டு வந்தார். சசிகலாவிடம் பேசிய, அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை நீ்க்கி வந்தது.

    சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அதிமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.  வரும் 17ம் தேதி அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி16ம் தேதி ( நாளை மறுநாள்) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

    மேலும் படிக்க: சனி, ஞாயிறு சசிகலா அதிரடி திட்டம்... பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு...

    17ம் தேதி திநகர் எம்ஜிஆர் நினைவிடம், ராமாபுரத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அங்கு அதிமுக கொடியை ஏற்றுகிறார். இதற்காக கூட்டத்தை திரட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அதிமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தென் சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.  மேலும் சசிகலாவை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் சுவொரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: