• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலாவுக்கு கொரோனா தொற்று

சசிகலாவுக்கு கொரோனா தொற்று

சசிகலா

சசிகலா

முன்னதாக சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் லேசான தொற்று இருப்பதும் நுரையீரலில் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

  • Share this:
    சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்த சசிகலாவுக்கு புதன்கிழமை காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து பெங்களுரு அரசு பவுரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்கெனவே இருப்பதாகவும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்கு குறைவாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஆக்சிஜன் உதவியுடன் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா உறுதியான நிலையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் லேசான தொற்று இருப்பதும் நுரையீரலில் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வருகிற 27 அன்று விடுதலை ஆக இருந்த நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், 10 நாட்களுக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: