• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆலோசனைகள் கூறியுள்ளேன் : தொலைபேசி உரையாடலில் சசிகலா தகவல்

எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆலோசனைகள் கூறியுள்ளேன் : தொலைபேசி உரையாடலில் சசிகலா தகவல்

சசிகலா

சசிகலா

கட்சி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகவும், துரோகத்தின் குமுறல்களை தினந்தோறும் வெளிப்படுத்தி வருவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    எம்.ஜி.ஆருடன் பயணித்து அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியுள்ளதாக சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தேர்தலுக்கு பிறகு, தனக்கு கடிதம் எழுதிய அதிமுக மற்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசி வரும் அவர், கொரோனாவுக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என கூறியது திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் பேசிய போது, எம்.ஜி.ஆருடன் பயணித்த காலத்தில் அவருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், தன்னுடன் தொலைபேசியில் பேசுவோரை அதிமுக தலைமை நீக்கம் செய்வது அவர்களுக்கு அரசியல் பக்குவமில்லை என்பதை உணர்த்துவதாக கூறினார்.

    ALSO READ |  சென்னை ஐஐடியில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு!

    மேலும், கட்சி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகவும், துரோகத்தின் குமுறல்களை தினந்தோறும் வெளிப்படுத்தி வருவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சசிகலாவின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாவுக்கே அரசியல் ஆலோசனை சொன்னதாகக் கூட சசிகலா கூறுவார் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: