எங்கே தங்கி இருக்கிறார் சசிகலா?

எங்கே தங்கி இருக்கிறார் சசிகலா?

சசிகலா

கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டு, இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 • Share this:
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா, இன்று விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்.

  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. கடந்த 27ம் தேதியோடு அவரது தண்டனை காலம் முடிவுக்கு வந்தது. ஆனால் சிறையிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்!

  பின்னர் கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டு, இன்று சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார். மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

  கொரோனாவில் இருந்து குணமாகி விட்டாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி மருத்துவர்கள் சசிகலாவை அறிவுறுத்தியுள்ளனர். அதனால் பெங்களூரிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் அவர் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்கும் சசிகலா பிப்ரவரி 3-ம் தேதி அல்லது 5-ம் தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: