ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பரபரப்பான சூழலில் தொண்டர்களைச் சந்திக்கும் சசிகலா!

பரபரப்பான சூழலில் தொண்டர்களைச் சந்திக்கும் சசிகலா!

தொண்டர்களை சந்திக்கும் சசிகலா!

தொண்டர்களை சந்திக்கும் சசிகலா!

அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு சட்டப்போர் நடந்துகொண்டிருக்கும் இச்சூழலில் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக சசிகலா அறிக்கை விடுத்திருக்கிறார். அதில் அஇஅதிமுக கழகப்பொதுச்செயலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் இடையே நடக்கும் பூசலால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கட்சிக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என எழுந்த கோரிக்கை இன்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இருவரில் யார் அதைக் கைப்பற்றப் போகிறார்கள் என்ற கேள்வியில் தொக்கி நிற்கிறது.

நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் பொதுக்குழு களேபரங்களுக்குப் பிறகு கட்சியின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றுவதற்கான நகர்வில் இபிஎஸ் ஒரு அடி முன்னாள் நகர்ந்திருப்பது தெரிகிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெரும் பகுதியினர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் அடுத்த மாதம் 11-ம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பொதுக்குழுவிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய ஓபிஎஸ் இரவே டெல்லி கிளம்பிச் சென்றார். சட்டத்துக்குப் புறம்பாக இபிஎஸ் அதிமுக தலைமையைக் கைப்பற்ற முயல்வதாக அவர் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார்.

Must Read: ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு: நிரந்தர அவைத் தலைவர் - அ.தி.மு.க பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வுகள்

அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு சட்டப்போர் நடந்துகொண்டிருக்கும் இச்சூழலில் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக சசிகலா அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

தமிழ் மண்ணில் உரிமைகளைக் காத்திடவும் , எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெருமைகளைப் பேணி காத்திடவும் ஒரு புரட்சி பயணத்தைத் தொடங்குவதாக சசிகலாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறு 26.06.2022 அன்று அவரது டி நகர் இல்லத்திலிருந்து புறப்படும் சசிகலா கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாகத் திருத்தணிச் சென்று , கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுப்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கழகப் பொதுச்செயலாளர், முகாம் அலுவலகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவும் பரபரப்புக்கு மத்தியில் சசிகலா ‘புரட்சிப் பயணத்தை’ தொடங்குவதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

First published:

Tags: ADMK, OPS - EPS, Sasikala, VK Sasikala