அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து எம்ஜிஆரின் படத்திற்கு சசிகலா மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்த நிர்வாகிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால் அவர்களே செய்து அனுப்புவார்கள். பின்பு இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதை பார்த்த பிறகுதான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால், இவர்கள் ஒரு முறை அனுப்பினார்களா அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை, ஆகவே, இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை. ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.
மக்களை அதிமுக ஒருபோதும் ஏமாற்றியது இல்லை என்று குறிப்பிட்ட சசிகலா, வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்றார்.
இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, “எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு எனக்கு என்ன பயம்..? விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை சந்திக்க திட்டம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.