Sasikala : தொண்டர்களின் மனக்குமுறல் அதிகமாக இருக்கு... இனிமேலும் சும்மா இருக்க முடியாது - சசிகலா

சசிகலா

தொண்டர்கள் என்னைத்தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்றீங்க. இதுக்காகவே நான் கட்டாயம் வந்துடுவேன்.

  • Share this:
    அதிமுக தொண்டர்களின் மனக்குமுறல் அதிகமாக இருக்கிறது என்றும் அதனால் இனிமேலும் சும்மா இருக்க முடியாது கட்சிக்கு நிச்சயம் தலைமை ஏற்போன் எனவும் சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    சசிகலா நாள்தோறும் தொலைப்பேசியில் அதிமுக தொண்டர்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ராஜா, மதுரையைச் சேர்ந்த கேசவ பாண்டியம்மாள், சிவகங்கையைச் சேர்ந்த சண்முகநாதன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், திருவள்ளூரை சேர்ந்த சாகுல் ஹமீது ஆகியோருடன் சசிகலா நேற்று பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, “அதிமுகவை சரி பண்ணி நல்லபடியாகக் கொண்டு வந்துடலாம். கவலையே படாதீங்க. கட்சிக்கு நிச்சயம் தலைமை ஏற்போன். தொண்டர்கள் என்னைத்தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்றீங்க. இதுக்காகவே நான் கட்டாயம் வந்துடுவேன்.

    பெங்களூருவில் இருந்து வரும்போது, ஒற்றுமையா இருந்து தேர்தலை சந்திங்க அதுதான் நல்லதுனு சொன்னேன். அதை அவங்க கேட்கல. ஆட்சியை இழந்துட்டோம். இப்போது தொண்டர்கள் மன்குமுறல் அதிகமாக இருக்கு. இனிமேலும் இதைப் பார்த்து சும்மா இருக்க முடியாது. கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு போகணும். அதுக்காகவே விரைவில் வந்துவிடுவேன்” என்று சசிகலா பேசியுள்ளார்.

    Must Read : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

    இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசுகையில், “கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் கவலைபட நான் இனி விடமாட்டேன். விரைவில் நான் வந்துவிடுவேன். கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன். தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன். ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் செல்வேன். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன்.

    Read More : சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும். கட்சியை நல்லபடியாக வழிநடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்” என்று கூறினார். இவ்வாறு தினந்தோறும் அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பேசி வருவது அரசியலில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    Published by:Suresh V
    First published: