Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் நான்தான் எதிர்கட்சியாக செயல்படுகிறேன் - சசிகலா

தமிழ்நாட்டில் நான்தான் எதிர்கட்சியாக செயல்படுகிறேன் - சசிகலா

சசிகலா

சசிகலா

தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக நான் தான் செயல்படுகிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

    கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘திராவிட மாடல் என திமுக அரசு தற்போது பேசி வருகிறது. ஆனால் அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது. குறிப்பாக அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமுக நீதிநோடு செயல்படுத்தியது.

    ஆனால் தற்போது உள்ள அரசு சமூக நீதிக்கான அரசு திராவிட மாடல் என பேசி வருகிறது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்ததுதான் உங்கள் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு வர வேண்டும் என அவரது ஆசையை தெரிவிக்கிறார்.

    வேறு ஒன்றும் இல்லை. நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கிராமத்தில் நீரோடையில் உயிர் இழந்த -சிறுமிகள் இந்த கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் ஏமாற்று பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் பிரித்திருக்கிறார்கள். எனவே இந்த கிராமம் முழுவதும் கழிப்பறை வசதி உடனடியாக ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரினார்.

    செவிலியர்களை தேவைக்கு ஏற்ப வேலை வாங்கி விட்டு தற்போது பணி நிரந்தரம் வழங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. நிரந்தர பணி வழங்க வேண்டியது அரசின் கடமை. நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிட தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சிதர்களிடமே இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Sasikala

    அடுத்த செய்தி