அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதா, இறப்பதற்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டுக்குச் செல்ல விரும்பியதாக, ஜெயலலிதாவின் தோழி சகிகலா கூறியுள்ள கருத்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “இதய தெய்வம் அம்மா அவர்கள் குணமடைந்து வந்ததால், அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 19, 2016 அன்று போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடித்தோம். ஆனால், நான் நேராக கொடநாடுதான் போவேன் என்று மருத்துவர்களிடமே அம்மா அவர்கள் சொன்னார்கள்.
அதற்கு, “அங்கு குளிராக இருக்கம், நாங்கள் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவது கடினமாக இருக்கும். அதனால் எங்களுக்காக ஒரு மாதமாவது சென்னையில் இருங்கள் அதன் பிறகு கொட நாடு செல்லலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கு, “இங்கே நான்தான் பாஸ்” என்று மருத்துவர்களிடம் இதய தெய்வம் அம்மா அவர்கள் சொன்னார்கள்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆணடு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மரணத்தின் மீதான சர்ச்சையும் அப்போதே தொடங்கிவிட்டது. அது இன்றுவரையில் தொடர்கிறது.
Must Read : ஜெயலலிதா மரண வழக்கு : அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது - உச்ச நீதிமன்றம்
ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ன என்பதை அறியவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.