ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இபிஎஸ் Vs ஓபிஎஸ்... தான் யார் பக்கம்? - சசிகலா கொடுத்த விளக்கம்!

இபிஎஸ் Vs ஓபிஎஸ்... தான் யார் பக்கம்? - சசிகலா கொடுத்த விளக்கம்!

சசிகலா

சசிகலா

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவினர் அனைவருக்கும் பொதுவான ஆளாக தான் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவினர் அனைவருக்கும் பொதுவான ஆளாக தான் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். கேக் வெட்டி அருட்சகோதரிகளுடன் பகிர்ந்துகொண்ட அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “பெங்களூருவில் இருந்து வந்தது முதல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகிறேன். அனைவரையும் ஒன்றிணைப்பேன் என இப்போதும் கூறுகிறேன். பழனிசாமி, பன்னீர்செல்வம்தான் தனித்தனியாக செயல்படுகின்றனர். அனைவருக்கும் பொதுவான ஆளாக நான் இருக்கிறேன். நான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், தனக்கு பிறகு யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும், அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில்தான் திடீரென இறந்து விட்டார் என்றும் குறிப்பிட்ட சசிகலா, “தீபா உட்பட யாரையும் நான் திட்டியதில்லை, அறிவுரைதான் கூறுவேன். நேரடி அரசியலில் நான் இல்லாவிட்டாலும் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசித்து இருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க; எடப்பாடியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..? அதிமுக குழப்பத்திற்கிடையே ட்விஸ்ட்..

அதிமுகவை பாஜக விழுங்கும் என்பது தவறு, யாரும் யாரையும் விழுங்க முடியாது என்று கூறிய சசிகலா, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒருங்கிணைப்பேன்.  நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம். யாருக்காகவும் நான் பயந்து ஓடி ஒளிய மாட்டேன் என்றார்.

மேலும் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து மனம் திறந்து பேசிய அவர், “ஆணையத்தின் அனைத்து கேள்விகளுக்கும் எழுத்து வடிவில் சரியான பதிலை கொடுத்தேன். 2016 டிசம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5ம் தேதிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று விவரித்தார்.

First published:

Tags: AIADMK, V K Sasikala