ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விரைவில் மக்களையும் தொண்டர்களையும் சந்திப்பேன் - சசிகலா

விரைவில் மக்களையும் தொண்டர்களையும் சந்திப்பேன் - சசிகலா

சசிகலா

சசிகலா

புரட்சித் தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளான இன்று, அவர் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, விரைவில் மக்களையும் தொண்டர்களையும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

  மேலும், மீண்டும் அதிமுக ஆட்சியை உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  கொரோனாவில் இருந்தபோது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன். அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு, நமது புரட்சித்தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்ற, மீண்டும் தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்.

  சசிகலா

  அதில் நாம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன் விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன்.

  இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மா கூறியதை நிரூபித்துக் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். திமுகதான் நமக்கு எதிரி. அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம்” இவ்வாறு சசிகலா அப்போது கூறினார்.

  Must Read :சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு

  Published by:Suresh V
  First published:

  Tags: Jayalalithaa, Sasikala