ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனி அரசியல் பயணம்: நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் உறுதி - சசிகலா சூளுரை

இனி அரசியல் பயணம்: நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் உறுதி - சசிகலா சூளுரை

சசிகலா

சசிகலா

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் என்று சேலத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தனர். சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதன்படி, வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மனுகளை ஏற்பதாகவும் சசிகலா மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி உத்தரவு பிறப்பித்தார். அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘அ.தி.மு.க தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கொங்குமண்டலம் அ.தி.மு.கவின் கோட்டை தான். அதனால் வழிவழியாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அனைத்தும் சரியாகும்.

தமிழகத்தை திராவிட இயக்கங்கள் தவிர்த்து வேறு யாராலும் ஆள முடியாது: செங்கோட்டையன்

சொத்து வரியை உயர்த்த கூடாது. அதை திரும்ப பெற வேண்டும். தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வேண்டியதைச் செய்வோம் என்றும் அறிவித்திருந்தார். மிக விரைவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். வரப்போகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம். ஆன்மீக பயணம் அரசியல் பயணமாக மாறுமா என்ற கேள்விக்கு ஆம் இனிமேல் அதை தான் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

எ.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களின் பாசறையில் வளர்ந்த நான், உண்மை தொண்டர்களின் துணையோடு, மீண்டும் கழக ஆட்சியினை அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன். இது உறுதி’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, VK Sasikala