'வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள்' - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

'வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள்' - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன்

கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள் என டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

  • Share this:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழல் போல வலம் வந்த சசிகலா 4 ஆண்டு கால சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்புகின்றார்.

சென்னை மாநகர எல்லையில் இருந்து சசிகலாவிற்கு 32 இடங்களில் அமமுக தொண்டர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ஓய்வெடுக்கும் சொகுசு விடுதிக்கு முன்பு டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா-வை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டார்களே என வருத்துமாக உள்ளது.

ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்ற அச்சம் அமமுகவினருக்கு மட்டும் அல்ல. பொதுமக்களுக்கும் உள்ளது.
காவல் துறை அதிகாரிகள் நடுநிலையாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கட்டுப்பாடுகளுடன் சசிகலாவை தொண்டர்கள் வரவேற்பார்கள். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் இடையே யார் பேசுவது என பேசிக்கொண்டதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. காவல் துறையும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் தொண்டர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே எந்த பிரச்னையும் வராது.

தொண்டர்களுக்கு இடையூரு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். சென்னை சென்றதும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல விரும்பினார் சசிகலா. அதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். சென்னை சென்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: