HOME»NEWS»TAMIL-NADU»sasikala released on january 27 official announcement by the karnataka prisons department video vai
V. K. Sasikala | ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை - கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருகின்ற 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017 பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது தண்டனை காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. ஆனால், சிறை விதிகளின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனுவானது நிலுவையில் இருந்து வந்த நிலையில், அபராதத் தொகையை செலுத்தியதால் வருகின்ற 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.
இதனிடையே, சசிகலாவுக்கு தண்டனை சலுகை அளிக்க அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடந்த நவம்பர் மாதம் இரண்டு முறை சிறைத்துறையிடம் மனு அளித்துள்ளார். இதற்கு மின்னஞ்சல் மூலமாக கர்நாடக சிறைத்துறை பதில் அளித்துள்ளதாகவும், அதில் வருகின்ற 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளதாவும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.