எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர் - புலமைப் பித்தன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

சசிகலா புலமைப் பித்தன்

எழுத்தாளர் புலமைப் பித்தன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற தொடங்கிய புலமைப்பித்தன் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற வளைகாப்பு பாடலான தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் புலமைப்பித்தன் எழுதியது குறிப்பிடத்தக்கது.

  எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அவருக்கு வயது 85. அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

  புலமைப் பித்தன் மறைவுக்கு சசிகலா விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ‘பெரியவர் புலவர் புலமை பித்தன் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். புலவர் புலமை பித்தன், எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதா மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். எம்.ஜி.ஆர் காலத்தில் சட்டமன்ற மேலவை துணைத் தலைவராகவும், அரசவை கவிஞராகவும் பதவி வகித்தார்.

  ஜெயலலிதா காலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவராகவும், அ.இ.அ.தி.மு.கவின் அவைத் தலைவராகவும் செயலாற்றியவர். திரைப்படங்களில் தன் பாடல்கள் மூலம் திராவிட சிந்தனையும் தமிழர்களின் வளர்ச்சி சார்ந்த கருத்துகளையும், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிய முறையில் வெளிப்படுத்தியவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அவர் எழுதிய பாடல்கள் எல்லோராலும் ஈர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அ.இ.அ.தி.மு.க தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. புலவர் புலமை பித்தனின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடுமபத்தினற்கும், அவரது துணைவியாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். புலவர் புலமை பித்தனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: