பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த சசிகலா புஷ்பா!

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.கவிலிருந்து விலகி இருந்துவந்தார். தமிழ்நாட்டுக்கு வராமல் டெல்லியிலேயே இருந்துவந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த சசிகலா புஷ்பா!
சசிகலா புஷ்பா
  • Share this:
பா.ஜ.க தலைவர் முரளிதரராவ் முன்னிலையில் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பா, 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தார். பின்னர், 2014-ம் ஆண்டு அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.கவிலிருந்து விலகி இருந்துவந்தார். தமிழ்நாட்டுக்கு வராமல் டெல்லியிலேயே இருந்துவந்தார்.

அதன்பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், பொதுச்செயலாளருக்கான மனுவைத் தாக்கல் செய்ய சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் வருகை தந்தார். அவரை, சசிகலா ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர்.


இதற்கிடையில், அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராகவே தொடர்ந்துவந்தார். இந்தநிலையில், டெல்லியில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர்கள், தமிழக தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.கவின் தேசிய தலைமை அலுவலகத்தில் வைத்து தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார்.

பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமாகிய முரளிதர ராவ் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Also see:
First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்