Home /News /tamil-nadu /

இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் வெல்ல நாம் ஒன்றாக வேண்டும்: சசிகலா உறுதிமொழி

இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் வெல்ல நாம் ஒன்றாக வேண்டும்: சசிகலா உறுதிமொழி

ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று வந்த சசிகலா, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று வந்த சசிகலா, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று வந்த சசிகலா, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் வெல்ல நாம் ஒன்றாக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பாக சசிகலா உறுதிமொழி ஏற்றுள்ளார்.

    அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு பொறுப்புகளுக்கும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று வந்த சசிகலா, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அந்த உறுதிமொழி பின்வருமாறு-

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாளில், தமிழக மக்களின் நலனுக்காகவும், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், ஒன்றிணைவோம்! உறுதி ஏற்போம்! நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ''மக்களால் நான் மக்களுக்காகவே நான்'' என்ற தாரக மந்திரத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து, தன் வாழ்நாள் முழுவதையும், தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் வறுமையைப் போக்கவும், தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக்கவும், தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய, நம் மக்கள் தலைவியின் ஒப்பற்ற சிந்தனைகளையும், உயர்ந்த கொள்கைகளையும், தொடர்ந்து செயல்படுத்திட, நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    Also Read :  இனியும்‌ இதை எல்லாம்‌ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.. கொதிக்கும் சசிகலா!!

    நம் புரட்சித் தலைவரும், நம் புரட்சித் தலைவியும், இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் இன்றைக்கு தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் ஒப்பற்ற தலைவர்கள் காட்டிய அதே வழியில், தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்போம்.

    நம் புரட்சித் தலைவரும், நம் புரட்சித் தலைவியும் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலைநிறுத்தி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழிவந்த, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக ஓரணியில் நின்று, ஒற்றுமையோடு இணைந்து, வரும் தேர்தல்கள் அனைத்திலும் நம் எதிரிகளை வென்று, வீறுநடை போட நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும். கரம் கோர்ப்போம். உறுதியேற்போம்.

    Also Read : அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் : ஓபிஎஸ், இபிஎஸ் வேட்பு மனுக்கள் ஏற்பு

    நம் புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும் தங்களது உயிர்மூச்சாக பாதுகாத்த நம் கழகம், மீண்டும் புத்துயிர் பெற, தமிழகத்தின் தன்னிகரில்லா இயக்கமாக மலர, விரைவில் கழக ஆட்சி அமைய, நம் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா அவர்களின் தலைமையில், ஒன்றிணைவோம்! வென்று காட்டுவோம்.

    இவ்வாறான உறுதிமொழியை சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Jayalalitha, Sasikala

    அடுத்த செய்தி