நிச்சயம் வருவேன்... எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம் - சசிகலா புது ஆடியோ வெளியீடு

சசிகலா

திருச்சி மாவட்ட அதிமுக, அமமுக, அதிக நிர்வாகிகளிடம் சசிகலா நடராஜன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிச்சயம் வருவேன் என்று நம்பிக்கையளித்துள்ளார்.

  • Share this:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு வழிநெடுங்கிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சசிகலா விடுதலையான உடன் அதிமுக தலைமை பொறுப்பேற்பார் என்றும் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியிலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் அதிமுக  நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என பலரிடமும் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள திவாகரனின் ஆதரவாளரான அல்லூர் சீனிவாசன், அதிமுக முன்னாள் நிர்வாகி, அமமுக நிர்வாகி மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒத்தக்கடை செந்தில் ஆகியோரிடம் சசிகலா பேசினார்.

Also Read : தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்

தற்போது அதிமுக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ஜோதியிடம் சசிகலா பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது. இதில், கடந்த 25 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருப்பதாகவும். திருச்சி மக்களவைத் பொது தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெற வைத்த அதிமுகவில் இன்றைக்கு ஜாதி ஆதிக்கம் நிலவுகிறது. இதனால்,  அதிமுகவிற்கு மிக மோசமான தோல்வி கிடைத்துள்ளது. நீங்க (சசிகலா) வர வேண்டும். கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அருள்ஜோதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிச்சயம் வருவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம். எல்லாம் சரியாகி விடும் என்று சசிகலா உறுதி கூறுகிறார். நடந்து முடிந்த சட்டப்யேரவைத் தேர்தலில் அருள்ஜோதி திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு, பத்மநாபன் என்பவருக்கு  வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரிடம் சசிகலா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Vijay R
First published: