• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை? - பெங்களூருவில் உறவினர்கள் முகாம்

பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலை? - பெங்களூருவில் உறவினர்கள் முகாம்

சுதாகரன்

சுதாகரன்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக சுதாகரன் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார்.

  • Share this:
    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் இன்று விடுதலையாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் அன்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை  செலுத்தியதால்  2 பேரும்  கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என அறியப்படும்  சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை. அபராதத் தொகையை செலுத்தாததன் காரணமாக  நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். இதற்கிடையில் சுதாகரனை சசிகலா கைவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

    சிறையில் இருக்கும் சுதாகரனின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அவர்  இன்று விடுதலை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: