• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘எல்லோரும் நம் பிள்ளைகள் தான்.. விரைவில் வருகிறேன்’ சசிகலா எடுத்த இறுதி முடிவு!

‘எல்லோரும் நம் பிள்ளைகள் தான்.. விரைவில் வருகிறேன்’ சசிகலா எடுத்த இறுதி முடிவு!

சசிகலா

சசிகலா

விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் எனவும் சசிகலா அறிவித்துள்ளார்.

  • Share this:
அதிமுக வீணாவதை ஒருநிமிடம் கூட பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா, தான் அரசியலில் இருந்து விலகி இருப்பேன் என அறிவித்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னர் அதிமுகவினருடன் பேசி வந்தார். அவ்வப்போது வெளியான தொலைபேசி உரையாடல்கள், சசிகலா மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்புவதற்கான சிக்னல் ஆக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சசிகலாவின் அரசியல் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள கட்டுரையில், அதிமுக வீணாவதை ஒரு நிமிடம் கூட பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சசிகலா கூறியுள்ளார்.

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை பொறுத்தவரை எல்லாரும் அதிமுக பிள்ளைகள்தான் என்றும் எம்.ஜி.ஆர். எப்போதுமே கட்சி வித்தியாசம் பார்க்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம் எனக் கூறியுள்ள சசிகலா, கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் எனவும் சசிகலா அறிவித்துள்ளார்.

Also Read:   டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணியில் 4 முக்கிய மாற்றங்கள் – 2 மாஜி கேப்டன்கள் அணியில் சேர்ப்பு!

அதிமுகவில் மாற்றம்:

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கு புதிய பதவி பொறுப்புகள் கொடுக்க வேண்டும், தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்..

முன்னதாக, எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அதிமுகவில் என்ன நடந்ததோ அதுவே தற்போது மீண்டும் நடந்திருப்பதாக சசிகலா கூறியிருந்தார். இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடப்பட்டிருந்த செய்தியில், “நமது ஒரே நோக்கம், இதய தெய்வம் அம்மா அவர்கள் சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் கவலை படக் கூடாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்.

Also Read:  பிரபல REC சோலார் பேனல் உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ் – ரூ.5000 கோடி முதலீடு

தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு இதய தெய்வம் அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்.

இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு துளிகூட மாறாமல் நாம் முயற்சி செய்து நல்லபடியாக வெற்றி வாகை கூட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, எண்ணம் என்று அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: