சொத்துக்குவிப்பு வழக்கில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா..

சொத்துக்குவிப்பு வழக்கில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா..

சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

  • Share this:
    சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகையான 10 கோடி ரூபாயை சசிகலா இன்று செலுத்துகிறார். 1991 முதல் 96ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, இதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா காலமானதால் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 3 வருடம் 8 மாதங்களாக சசிகலா இருக்கும் நிலையில், இன்று அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் அவர் செலுத்த இருக்கிறார். 5 கோடி ரூபாய்க்கு ஆக்சிஸ் வங்கி வரையோலையாகவும், மற்றொரு 5 கோடி ரூபாய்க்கு எஸ்பிஐ வங்கி வரையோலையாகவும் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் சசிகலா வழக்கறிஞர்கள் செலுத்துகின்றனர். அபராத தொகை செலுத்தப்பட்டால் வரும் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க.. அமித்ஷா வருகை.. மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை



    ஏற்கனவே இது தொடர்பாக சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published: