வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது, இதனால் சட்டமன்ற தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா. தண்டனை காலம் முடிவடைந்து சமீபத்தில் விடுதலையானார். சென்னை திரும்பிய அவர் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாக அதிரடியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து குல தெய்வம் கோயில் உள்ளிட்ட, பல்வேறு கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் சசிகலா வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா இல்லம்’ இல்லத்தின் முகவரியில், சசிகலாவின் பெயர் பதிவாகி இருந்தது. தற்போது போயஸ் கார்டன் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதால், அந்த முகவரியில் இருந்த அனைவரின் பெயரும் அந்தப் பகுதி
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Must Read : பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும் - சத்யபிரதா சாகு
அரசியலில இருந்து ஒதுங்கி இருக்கும் சசிகலாவுக்கு, தற்போது வாக்களிக்கும் வாய்ப்பும் கிட்டாத சூழல் உருவாகியுள்ளது என ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.