முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா

மதுரையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா

சசிகலா

சசிகலா

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சசிசலா தொண்டர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :

தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மருதுசகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கும் சசிகலா, அதனைத் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த சசிகலா முதற்கட்ட பயணமாக தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சாவூரில் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் புதன்கிழமை பங்கேற்ற அவர், இன்று மதுரைக்கு செல்கிறார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், வண்டியூர் தெப்பக்குளம் அருகேயுள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். அதனை தொடர்ந்து கோரிப்பாளையம் பகுதியில் சசிசலா தொண்டர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ள சசிகலா, பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தஞ்சை அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர், சரியாக பேசியுள்ளார். சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சரியாகவே பேசியுள்ளார். இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவரும், டிடிவி தினகரனும் மேடையிலேயே தனியாக நின்று சிறிதுநேரம் பேசி கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து ஓ.ராஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Must Read : சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியாக பேசியுள்ளார்: டிடிவி தினகரன்!

சில தினங்களுக்கு முன்னர், அதிமுகவில் சசிகலா சேர்த்து கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: O Panneerselvam, Sasikala, TTV Dhinakaran