Home /News /tamil-nadu /

ரஜினிகாந்த்துடன் சசிகலா திடீர் சந்திப்பு

ரஜினிகாந்த்துடன் சசிகலா திடீர் சந்திப்பு

சசிகலா, ரஜினிகாந்த்

சசிகலா, ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தீவிர பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.கவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அ.தி.மு.கவை மீட்பேன் என்று கூறிவருகிறார். இந்தநிலையில், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு சென்று அவரையும் அவரது மனைவி லதாவை சந்தித்து பேசியுள்ளார் சசிகலா.

    அந்தச் சந்திப்பின்போது ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Rajinikanth, Sasikala

    அடுத்த செய்தி