Home /News /tamil-nadu /

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் விசிட்! ஸ்வீட் கொடுத்த சசிகலா!!

ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் விசிட்! ஸ்வீட் கொடுத்த சசிகலா!!

சசிகலா, வைத்தியலிங்கம்

சசிகலா, வைத்தியலிங்கம்

அதிமுக விவகாரத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பிஎஸ் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என தெரிவித்திருந்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற சசிகலா, அங்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சசிகலா வந்திருந்தார். இந்நிலையில் அதே விழாவில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் பங்கேற்றார்.

    அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். வைத்தியலிங்கத்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



    ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்கிறார். மேலும் நேற்று இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர். இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் நுழைய பாதுகாப்பு கோரியிருந்தனர். அதற்கு காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே பாதுகாப்பு வழங்க முடியும் என தெரிவித்தது.



    இவ்வாறு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பிஎஸ் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் வாசிக்க: நீதிமன்றம் அனுமதித்தால் ஓ.பி.எஸ்.க்கு பாதுகாப்பு - காவல்துறை விளக்கம்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, OPS - EPS, Vaithiyalingam, VK Sasikala

    அடுத்த செய்தி